திங்கள், 31 ஜனவரி, 2011

நடிப்பு

நடிக்கவும் தெரிகிறது
எனக்கு

அவள்
இல்லாதபோதும்
சிரிக்கிறேன்

தெரியாமலே

காதலை - நான்
தெரிந்திருக்கவில்லை

இருந்தால் - என்றோ
உணர்ந்திருப்பேன்
எங்களுக்குள்
அதுதானென்று

ராஜமரியாதை

சில துணிகளுக்கு
ராஜமரியாதை

உடுத்திய அன்று
அவளை
பார்த்துவிட்டால்

சாமிக்கு தெரியும்

யாருக்கு எப்படியோ
சாமிக்கு தெரிகிறது

நாங்கள்
ஈருடல் - ஒர்
உயிரென்று

கோயிலில் - அவள்
வேண்டிக்கொள்வாள்

வீதியில் - எனக்கு
தரிசனம்

புதன், 26 ஜனவரி, 2011

எனக்காக

முதன்முதலில்
சேலை உடுத்திவந்தாள்
சிலைபோல
எனக்காக

இனி வேண்டாமென்றேன்

பின்னே - நான்
சிலையாகிபோனால் - அவள்
யாரோடு பேசுவாள்

இரட்டை பெயர்

அவளை நானும்
என்னை அவளும்
பெயர்சொல்லித்தான்
அழைத்துக்கொள்வோம்
ஓரு உயிர்
இரு பெயர்கள்

பேசுவதில்லை

நானும்
அவளும்
பேசிக்கொள்வதில்லை

தனக்கு
தானேபேசிக்கொண்டால்
பைத்தியமாமே ?

பார்த்தது பிடித்தது

கண்ணாடி
தொட்டிக்குள்
கருப்புவெள்ளை
மீன்கள்

வண்ணமில்லை
என்றாலும்
வசீகரம்

மூக்குக்கண்ணாடிக்கு
பின்னால்
அவள்
கண்கள்

வெள்ளி, 21 ஜனவரி, 2011

கூடை நிறைய குப்பை

மூங்கில்
கூடைக்காரி
முந்தானை சும்மாடு,

தலைக்கு
மேலே இருப்பதால்
கிரீடமா என்ன

கூடை நிறைய
குப்பை

சுமந்து போகிறாள் - ஆனால்
சும்மாதான்
கை வீசி போகிறாள்

கட்டி வைத்தாளோ
தலையோடுதான் - கூடையை
ஒட்டி வைத்தாளோ

தொட்டில் குழ்ந்தைபோல
தூங்கிப்போகிறது
சுமைகூ(டை)ட

புதன், 19 ஜனவரி, 2011

கொளுத்த வேண்டிய குற்றம்

அன்றைக்கும்
இன்றைக்கும்
என்றைக்கும் - அவள்
மட்டும் தான்
கற்புக்கரசி.............

காற்ச்சிலம்பை
உடைக்காத
நம் வீட்டு
கண்ணகிகள்...?

நாட்டிற்க்கோ,
வீட்டிற்க்கோ,
நற்பண்பிற்க்கோ,
மன்னனில்லை

கோவலன்

அடிமை
ஆடல் அழகிக்கு

அவன்
இருந்தாலென்ன,
தவறுதலாய்
இறந்தால்தான் என்ன ..?

இருந்தும்
எரிக்கிறாள்
ஊரையே !!

உரைக்கிறது
எல்லோர்க்கும்

கொலை
குற்றம் தான்

அதிலும்

கொற்றவன் குற்றமென்றால்
கொளுத்த வேண்டிய குற்றம்

படித்தோம்
படிப்போம்
எல்லோர்க்கும் எடுத்துரைப்போம்

இருந்தும்
தேர்தலில்....!??

வாய்ப்பிருந்தும்
விரைத்துப்போய்
வீணடிப்போம்.... அட

எரிக்க வேண்டாம்
எதிர்க்கவாவதுவேண்டாமா.......?

புதன், 12 ஜனவரி, 2011

உள்தாழ்ப்பாள்

மூக்குத்தி திருகாணி
மூச்சுக்காற்றாவது
உரசிச்செல்லும்
வேர்க்காமல்

உனக்கு
சன்னல் காற்றாவது
வருகிறதா
சுவாசிக்க

உன் வீட்டின்
உள்தாழ்ப்பாள்
வெளியில்
நான்

அத்துமீறினால்
உலகம்
ஏசும்

அது கிடக்கட்டும்

உனக்கும்
என் நினைவு
வருமா ????

காகமாக படைதிருக்கலாம்

மயிலாக !
குயிலாக !
கிளியாக !
வேண்டாம்

காகமாகவாவது
படைதிருக்கலாம்

கூட்டுக்குள் தான்
பிறந்திருப்பேன்- ஆனால்
இறக்கைகள்
முளைத்ததும்
இஷ்டம்போல் பறந்திருப்பேன்

சிக்கலான சம்பிரதாயங்கள்
சிந்தை முடக்கும்
சொந்தபந்தங்கள்

மனிதனாய் படைத்தது
தண்டிக்கத்தானோ..

செவ்வாய், 11 ஜனவரி, 2011

கூட்டுக்குள் கொலை எரிச்சல்

கொதிக்கும்
நெருப்பும் கூட
நான் கொஞ்சம்
முறைத்து பார்த்தால்
விழுங்கும்
தனலையும் - அது
கக்கும் அனலையும்

என் கூட்டுக்குள்
கொலை எரிச்சல்
குமட்டி
துப்பவும் முடியாமல்
குளிரவும் முடியாமல்
வெளிரிப்போய்
தவிக்கிறேன்

வீரமும்
வேகமும்
வேலைக்கு ஆகாத
அஹிம்சை போராட்டம்

அந்நியனோடா ..?
மகிழ்ச்சியோடு
மல்லுக்கு நிற்க...?

எனக்கு
அம்மா வேண்டும்
அவளும் வேண்டும்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

வசீகர புன்னகை

கூடி கூடி - சில
கொள்கைகள் சொல்லி

வாடிய பயிர்களே
உம்மை
வாழ்விக்க வந்தேனென்று
வசனங்கள் பேசி

தேடிய செல்வமெல்லாம் - தம்
வாரீசின்
பெயரில் நிரம்ப - தினம்

வசீகர புன்னகை வீசி

உலா வரும் நம்
சில அரசியல்
தலைவரைப்போல்

எங்கும்
அயோக்கியர்
எவருமுண்டோ...?

G.T.முருகன்

சனி, 8 ஜனவரி, 2011

நீதான் செய்யவேண்டும்

நீந்தி கடந்த
தூரம் பெரிதல்ல
மீனுக்கு

என்றாவது
கரைமீது விலுந்துவிட்டால்
தவ்வி குதித்து
தண்ணீருக்குள் வரவேண்டும்
அதுதான் அரிது

உயிர் பயம்
உள்ளூக்குள் இருந்து - ஒரு
உந்துதல் தரும்
உனக்கே தெரியாது

நீ
இத்தனை உயரம்
துள்ளி குதிப்பாய் என்று

ஆடிய ஆட்டமும்
பாடிய பாட்டும்
அத்துனை மகிழ்ச்சியும்

அடியோடு மறந்துபபோகும்
உச்சந்தலையில் - ஓர்
அடி விழுந்தால்

மகிழ்ச்சியை
தாங்கி நிற்கவோ - இல்லை
மரண வலி
தவிர்த்து நிற்கவோ

நிச்சயம்
நீதான் செய்யவேண்டும்

நிமிர்ந்து நிற்பதையும் - என்றும்
உயர்ந்தே நிற்பதையும்.

G.T.முருகன்

திமிர்

பயிற்ச்சி காலத்திலேயே
தீ பருகி
தீர்ந்துவிட்டதென்று
தாகம் தெரிவித்தவன் - இன்று

பட்டம் வாங்கியபின்
போற்த்தி படுத்தால்
பற்றிஎரியும்
கூரை தீ என்ன
பாவமென்றா விட்டுச்செல்லும்

விட்டம் வெறித்து
வெருமனே இருக்க
வீனனில்லை - இவன்
வீரன்

வீரம் என்பது
நினைவுகள் கூறி
நிமிர்ந்து இருப்பதல்ல
நிகழும் நொடியில்
ஜெயித்து நிர்ப்பது.

நிச்சயம் வெல்வேன்.

G.T.முருகன்