வியாழன், 24 பிப்ரவரி, 2011

பூ

பிடித்த- பூ
பெயர் கேட்டாள்

ஏதோ நினைவு

சூரியகந்தியை
சொல்லிவிட்டேன்

வாடிப்போனாள்

விழங்காமலே
தவிக்கிறேன்

எப்படி
மறந்துபோனேன்

அவள் பெயரை

சிரிக்கவா அழுதிடவா....

சிறப்பு கட்டண
பாகுபாட்டில்
சீக்கிரம்
சாமிதரிசனம்

மாத சம்பள
அர்ச்சகரை
மகிழ்விக்க
தட்சணைகள்

கனமாய் கவனித்த
பக்தருக்கு
பூ பழம் புன்னகை
கௌரவப்பிரசாதம்

வாசலில் யானை

அர்ச்சகர்
கற்பூரம் காட்டி - அது
கருப்பு
கரம் நீட்டி

வெளியில்தான் விந்தயே..

தகுதிகள்
நிறைந்த
தரித்திரக்காரர்கள்

பிச்சை போட
அச்சப்படுகிறான் பக்தன் ?

வாங்கிய வரம்
தானத்தோடே
தானும் போய்விடுமாம்

யாராவது
ஒன்றைமட்டும்
விளக்குங்கள் - இங்கு

நான்
சிரிக்கவா
அழுதிடவா.....

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

கவிழாமல்

காய்கறி கூடைக்கும்
கூடைக்காரி மண்டைக்கும்
இடைத்தரகராய்
முந்தானை

தோல்மீது தொத்தி
துயிலாடி திரிந்தால்
துரத்தும்விழி
எத்தனையோ

மார்ச்சுமை ஏந்தி
சும்மாடாய் சுருண்டதும்
மாறிவிட்டது
பார்வைகள்

தூக்கி இறக்கும்
ஒவ்வொரு முறையும்
குனிகிறாள்
கூடைவரை

தலை மட்டும்
கவிழாமலே உள்ளது
கந்தல்துணி
கிரீடத்தோடு

காற்றாய்

நேற்றைய
காற்றில் - நீ
நிறைந்திருப்பதாய்
நினைத்தேன்

சுவாசத்தை
நிறுத்தியிருக்க வேண்டும்

கோழைத்தனம்

காற்றுக்கு வேலிபோட்டு
விட்டுவிட்டதால்

விரட்டி விரட்டி
காயப்படுத்துகிறாய்

காற்றாய்

திங்கள், 7 பிப்ரவரி, 2011

புரியாத சூரியன்

நான் ஃபீனிக்ஸ் அல்ல - ஆனால்
ஃபீனிக்ஸ் _ ம்
என்னை போலத்தான்
சூரியனை
தொடலாம் தொடலாமென்று
முயல்கிறது

புரியாத சூரியன்
எரியத்தானோ - என்று
உரைக்கிறது
என்னிடம்
உன்னைப்போல

வியாழன், 3 பிப்ரவரி, 2011

துவக்கம்

நெல்லிக்காய்
கொடுத்தாள் - மறுநாள்
விடியல்
பல் கூசியது

எழுந்ததும்
பல்தேய்க்க
சொன்னாள்

அடடா அடடா

இங்கேதான்
அவள்
நினைவு துவங்கும்
ஒவ்வொருநாளும்

பஞ்சம்

கோவித்தால்
அவள்
கூடுதல் அழகு

எனக்கு
கொள்ளளவு
பஞ்சம்

அதனால்தான்
சிரிக்கவைத்து
ரசிக்கிறேன்

மௌனம்

மௌனம் - ஒரு
மொழியென்று
புரியசெய்தாள்

கடைசிவரை

அவள் மௌனத்தின்
பொருள்மட்டும்
புரியாமலே
எனைசெய்தாள்

அவள் !!!

சூத்திரம் புரியாமல்
தவிக்கிறேன்

நெஞ்சில்தான்
குடியேறினாள் - என்

தலையில்
கனமேரிவிட்டது

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

கூர் கெட்ட காதல்

காதல்
கூர்கெட்டதுதான்

ஊர்ந்துவரும்
கம்பளிபூச்சிக்குள்ளுமா
தெரிவாள்
அவள்

அதுதான் சரி

சைக்கிள்
ஓட்டதெரியாது
அவளுக்கு

கற்றுக்கொடுக்க
பார்த்தேன் - சில
நப்பாசையோடு

உட்கார்ந்துகொள்ள
ஒத்திகை எதற்கென்றால் - ஆம்
அதுவும் சரிதான்