புதன், 23 மே, 2012

பிரபாகரன் தீவிரவாதியா? 
 பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்.
நன்றி விகடன் தமிழர்களாகிய நாம் எம் விடுதலையை வென்றெடுத்து எமக்கென ஒரு தனிநாட்டை அமைக்க வேண்டும் என்று பல வழிகளில் முயன்று இறுதியில் ஆயிதம் ஏந்திப் போராடினோம் பல சாதனைகளை செய்தோம் பல வீரர்களை கண்டோம் . இருந்தும் எம் ஆயித போராட்டத்தை தொடர்ந்தும் தக்கவைக்க முடியவில்லை .இதற்கு முக்கிய காரணம் உலகில் எம் இனத்துக்கு என்று ஒரு வலுவான அரசியல் பின்னணி இல்லாமல் போனதே என்பதை யாரும் மறுக்கக் கூடாது .

தமிழனுக்கு என்று ஒரு வலுவான அரசியலை அமைக்க வேண்டுமெனில் அது தமிழக மக்களால் மட்டுமே முடியும். ஆனால் எம் ஜி ஆருக்கு பின் வந்த ஆட்சியாளர்கள்... ரால் போட்டு சுறாப் பிடிப்பது போல் சில இலவசங்களை மக்களுக்கு காட்டிஆட்சியில் அமர்ந்ததும் தங்கள் பொக்கிசங்களை நிரப்புவதிலேயே குறியாய் இருக்கிறார்கள் .திமுகா ஆதிமுகா எனும் இரண்டு பண முதலைகளும் இதுவரை தமிழர்களுக்கு செய்த சாதனை தான் என்ன ?இதை ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் தன்னை தானே கேட்டுப் பாருங்கள் .

இதே நிலை தொடருமாயின் இன்னும் இரண்டாயிரம் வருடம் சென்றாலும் தமிழன் மட்டும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் நிலையே தொடரும் எம் ஜி ஆர் அவர்கள் எனக்கு சிறு வயது இருக்கும் போதே இறந்து போனாலும் இன்றும் நான் போற்றும் தமிழக வரலாற்று நாயகன் அவரே .இனி வரும் சந்ததியும் அவர் புகழை மறவாது . திமுக பணமுதலைகளும் வாய் பேச்சி தம்பி கால் நடை மட்டுமே. எனவே மக்கள் இதைப் புரிந்து கொண்டு ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளின் தடையை நீக்க செய்து தமிழீழ தேசத்தை வென்றெடு ப்பதற்கு முற்று முழுதான ஆதரவை தரவேண்டும் .       

வாஞ்சிநாதன் புரட்சிவீரன் - பிரபாகரன் தீவிரவாதியா?


போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பதை கால் அறியாது
1973 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ம் தேதி முதல் 9 ம் தேதி வரை, யாழ்ப்பாணத்தில் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் மாநாடு நடைபெற்றது.


ஜனவரி 10 ம் தேதி அன்று மாநாட்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களை பாராட்டி பரிசு வழங்குவதற்காக ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். நேரமாக நேரமாக நிகழ்ச்சி நடைபெற்ற வீரசிங்கம் அரங்கத்தில் கூட்டம் அலைமோதியதால், பார்வையாளர்கள் அனைவருக்கும் இடவசதி கிடைக்கும் பொருட்டு வீரசிங்கம் அரங்கத்திற்கு வெளியே இருந்த அந்த வளாகத்திற்கு சொந்தமான திடலில் நிகழ்ச்சியைத் தொடர அமைப்பாளர்கள் முடிவு செய்தனர்.

பத்தாயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் விழா நடந்த திடலையும் தாண்டி சாலைகளில் வழிய தமிழகத்தை சேர்ந்த புலவர் நைனா முகமது உரையாற்றத் துவங்கியிருந்தார். மகுடிக்கு மயங்கிய அரவமாக மக்கள் வெள்ளமும் அமைதியாக அன்னாரின் உரையை கேட்டுக்கொண்டிருந்தது.

அந்நேரம் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்திரசேகரா என்கிற சிங்கள அதிகாரி தலைமையில் 40க்கும் மேற்பட்ட கலவர தடுப்பு வீரர்கள் தனி வாகனத்தில் வீரசிங்கம் அரங்கத்தை அடைந்தனர். முன்னறிவிப்பில்லாத இந்த வருகையால் அரங்கத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இந்த குழப்பத்தை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு ஆகிய களேபரங்களால் மைதானத்தின் மேல் தொங்கிக்கொண்டிருந்த மின்சார வயர்கள் அறுந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர், ஐம்பதிற்கும் மேற்பட்டவர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமான காவல் அதிகாரிகளுக்கு தண்டனைக்கு பதிலாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

தமிழர்களுக்கு எதிராக அவிழ்த்து விடப்பட்ட இந்த அடக்குமுறைக்கு பதிலடியாக யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பா, 1975 ம் ஆண்டு ஜூலை 27 ம் தேதி வேலுப்பிள்ளை பிரபாகரன் என்கிற தமிழரால் கொல்லப்பட்டார்.

(சிங்கள அடக்குமுறைக்கு எதிராக அதுவரை நடந்த காந்திய வழி போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக மாறியது இங்குதான்)

இதைபோலவே இந்திய சுதந்திர போராட்டத்தின்போது நடந்த ஒரு சம்பவம்:


வ.ஊ.சி யின் சுதேசி கப்பல் கழகத்திற்கு எதிராக ஆங்கிலேய அரசால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பதிலடியாக 1911 ம் ஆண்டு ஜூன் 17 ம் தேதி திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரை வாஞ்சிநாத அய்யரால் கொல்லப்பட்டார். இது சிப்பாய் கலகத்திற்கு பிறகு தமிழக சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த ஒரே வன்முறை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆங்கில அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திய வாஞ்சிநாத அய்யர் புரட்சி வீரன் , சிங்கள அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திய வேலுப்பிள்ளை பிரபாகரன் தீவிரவாதியா?
     
அடப் பொறுக்கிப் பயலே கருணா இதற்குத் தானா எம் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்து விட்டு காம வெறி கொண்டு அலைகிறாய் உன் சாவு நல்லதாய் அமையவே கூடாது .     தலைவர் பிரபாகரனை தாங்கள் கொன்று விட்டதாக சிங்கள அரசு உலகை வேண்டுமென்றால் ஏமாற்றலாம் .ஆனால் அவரின் நினைவோடு அவரின் கனவோடு அவரின் சுவடுகளின் பின் தொடரும் தமிழர்களை ஏமாற்ற முடியாது .எம் தலைவன் இறந்து விட்டதாக சிங்கள அரசு காட்டிய முதலாவது படத்தையும் அவரின் உண்மையானா நான்கு வித்தியசமான படங்களையும் இங்கு இணைத்துள்ளேன். இதில் சிங்கள அரசு காட்டிய படத்துடன் எம் தலைவனின் மீசை முதல் எதாவது ஒன்று ஒத்துப்போகிறதா ? கவலை வேண்டாம் எம் உறவுகளே!! எம் தலைவன் நலமுடன் உள்ளார் ..  

எம் தேசிய தலைவர் தன் வாழ் நாள் எல்லாவற்றையும் தன் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் அற்பனித்தார் ... இன்னும் செய்து கொண்டு இருக்கிறார் .அவரின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி இறுதிவரை களத்தில் நின்று போராடி வீரகாவியம் ஆனார் .இறுதிக் கட்டத்தில் ஈவறக்கம் இன்றி இன வெறி கொண்டு தன் மக்கள் மீது ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியதால் மக்களின் அழிவை விரும்பாத தலைவர் உலகநாடு சிலவற்றின் வாக்குறுதியை நம்பி போராளிகளை சரணடைய வைத்தார் .அவர்களுடன் தன் இளைய மகனையும் அனுப்பினார் ஆனல் இனவெறி கொண்ட அரச படைகள் தலைவரின் மகனையும் கணிசமான போராளிகளையும் சுட்டுக் கொன்றார்கள் .

தன் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்கிறார் அவர்கள் சுகமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றெல்லாம் அவதூறு சொன்ன வாய்களே !!இதைபாருங்கள் .தன் தாய் தந்தைமுதல் இறுதி யுத்தம் வரை மக்களோடு மக்களாகவே வைத்திருந்தார் தன் பிள்ளைகளை களத்தில் இறக்கினார் இந்தவகையில் அவருடைய மகள் தூவாரகாவும் இறுதி யுத்தத்தில் சிங்கள படைகளை அழிப்பதற்கு கரும் புலியாக சென்றார் என்றே கூறப் படுகிறது .

எந்த லட்சியத்துக்காக பல்லாயிரம் போராளிகளையும் லச்சக் கணக்கான மக்களையும் இழந்தோமோ அந்த லட்சியம் நிறைவேறும் வரை அந்த தன்னலமற்ற மாவீரனின் உயிரை எமனும் நெருங்க மாட்டான் .அந்த ஒப்பற்ற வீரனை வரலாறு என்றுமே மறவாது ..தமிழர்களின் சாபம் அவர் ஒருவரால் தான் விமோசனமாகும் . சத்தியமே வெல்லும் தமிழீழம் மலரும்.
 இவ்வுலகில் குறுகிய சனத்தொகை கொண்ட மக்கள் கூட தமக்கென ஒரு நாடு வைத்துள்ளார்கள். எட்டுக் கோடிக்கு மேல் உள்ள தமிழன் தன் சுயநலத்தால் தெருவில் நிக்கிறான்.. அடுத்தவன் திண்ணையில் குந்தி இருக்கிறான் ..பாவம் தமிழன் என்று ஆண்டவன் இரக்கப்பட்டு தமிழன் தனக்கென்று ஒரு நாட்டை அமைக்கட்டும் என்று நினைத்து தமிழனின் விடிவெள்ளியாக எம் தலைவன் பிரபாகரனைஒரு அவதாரமாகப் படைத்தார் ..ஆனால் தமிழன் கோட்டை விட்டு விடுவான் போல் தெரிகிறது .ஒருவன் ஏற மற்றவன் இழுத்து விழுத்துகிறான்..இந்தப் பாவப் பட்ட தமிழினத்தை யார் தான் காப்பாற்றுவாரோ தெரியவில்லை .இனியாவது திருந்துமா எம்மினம் ??   


வேட்டையாடி விட்டு 
வெறி நாயைப் போல் 
சூழ்ந்திருக்கும் கூட்டமே! 
என் நெஞ்சி வலிக்கிறது 
என் உறவை நினைத்து 
கைகள் துடிக்கிறது
கயவரே உமை அழிக்க

மவ்ணிக்க செய்தோம்
ஆயிதத்தை தானடா
மானத்தை அல்ல
மதிகெட்ட கூட்டமே !!
பதில் சொல்வாய் ஓர்நாள்

கண் கெட்ட உலகம்
கண் மூடித் தூங்க
எம்மினத்தின் உத்தித்தை
குடித்து நீ மகிழ்ந்தாய்
எண்ணற்ற உறவை
கற்பழித்து மகிழ்ந்தாய்

வட்டியும் முதலுமாய்
தந்திடுவோம் ஓர் நாள்
உண்மைகள் ஒருபோதும்
உறங்கியது கிடையாது 
 

நாற்பது வருடம் சிங்கள இனவாதிகளுக்கு சவாலாக இருந்த தமிழ் புரட்சியாளனை இலகுவில் யாரும் அழித்து விட முடியாது. அப்படி எதும் நடந்தாலும் கூட..! உலகில் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் இருந்து அவரை ஒரு போதும் அழிக்க முடியாது என்பதை சிங்கள இனவாதிகளும் இனத் துரோகிகளும் புரிந்து கொள்ள வேண்டும் ..
       


நன்றி விகடன் & facebook friends

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக