புதன், 23 மே, 2012

தமிழ் தனித்துவமான மொழி




 









தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது .

இங்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலை சுவடிகள், தஞ்சாவூர் ஓவியங்கள், கையெழுத்து படிகள், பழமையான நூல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1627 அச்சிடப்பட்ட பழமையான் அச்சு புத்தகம் இங்கு பாதுகாக்கப் பட்டு வருகிறது .

தமிழர் நாட்டில் உள்ள பண்டைய ஓலை சுவடிகளில் 50 மட்டுமே இது வரை படித்து அறியப்பட்டுள்ளன. அதற்குள் அடங்கியவை தான் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூற, புறநானூறு, பதிற்று பத்து, எட்டு தொகை, நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறு சீவக சிந்தாமணி, பரி பாடல் போன்றவை.

இதில் சில இலக்கியங்களின் செழுமையும் தொன்மையையும் கண்டு உலகமே வியந்து நிற்கிறது.

மூன்று லட்சம் ஓலை சுவடிகளையும் படித்தறிந்தால் தமிழனின் வாழ்க்கை முறையும் தமிழ் மொழியின் செழுமையும் பற்றி நாம் அறிந்து கொள்ள எதுவாக இருக்கும் .

உலகில் தோன்றிய மொழிகளில், மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த இனம் தமிழினம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்க இந்த ஓலை சுவடிகள் உதவும்.












1918-ஆம் ஆண்டு கல்வெட்டுத் துறையினர் படி எடுத்த "திருவிடைவாயில்' கோயில் தேவாரக் கல்வெட்டு - தற்போது இக்கல்வெட்டு அழிக்கப்பட்டுவிட்டது. (கோயில் மகாமண
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய பாடல்களை "தேவாரம்' என அழைப்பது வழக்கம். மூவர் முதலிகள் இப்பனுவல்களைப் பாடிய காலத்தும், பின்பு அவற்றை சோழப் பெருவேந்தர்கள் கண்ணெனக் காத்த காலத்தும் "தேவாரம்' என்ற சொல்லால் அதனைக் குறிக்கும் வழக்கம் இல்லை. திருப்பதிகம், திருப்பதியம், என்றே குறிக்கும் மரபு இருந்துள்ளது.
÷திருக்கோளிலி (திருக்குவளை) என்னும் சோழநாட்டுத் தேவாரத்தலத்தில் காணப்படும் சடையவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியனின் கல்வெட்டில்தான் முதன் முதலில் திருஞானசம்பந்தரின் பதிகத்தை, "தேவாரம்' என்ற சொல்லால் குறிக்கும் நெறியைக் காணமுடிகிறது. அக் கல்வெட்டோ கி.பி.1286-ஆம் ஆண்டில் பொறிக்கப்
பட்டதாகும்.
÷மாமன்னன் இராஜராஜசோழன் காலத்தில் தேவாரப்பனுவல் பாடும் மரபு வழக்கில் இல்லாமல் மறைந்ததாகவும், பின்பு அவன் திருநாறையூர் பொல்லாப்பிள்ளையார் அருளாலும், நம்பியாண்டார் நம்பியின் உதவியாலும் தில்லைக் கோயிலில் மூடப்பட்டிருந்த அறையிலிருந்து செல்லரித்த நிலையில் இருந்த தேவார ஏட்டுச்சுவடிகளை மீட்டு, திருமுறைகளைத் தொகுக்கச் செய்ததாகவும் உமாபதிசிவம் என்பவரால் எழுதப்பட்ட "திருமுறைகண்ட புராணம்' என்ற கி.பி.15-16-ஆம் நூற்றாண்டு நூலொன்று கூறுகிறது.
÷தமிழக வரலாற்றைப் பொருத்தவரை கி.பி. 5-6-ஆம் நூற்றாண்டு காலகட்டமான களப்பிரர் ஆட்சியை "இருண்ட காலம்' எனக் கூறுவர். அது தவறு. களப்பிரர் கால வரலாற்றுச் சான்றுகள் அண்மையில் வெளிப்படலாயின. அவற்றை நோக்கும்போது மொழி அடிப்படையில் சில தாக்கங்கள் ஏற்பட்டனவேயொழிய பெரிய அழிவுகள் ஏற்படவில்லை. ஆனால், கி.பி.14-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த படையெடுப்புகளாலும், அக்கொடியோர்களின் தாக்குதல்களாலும், அடக்குமுறைகளாலும் தமிழுக்கும்,
தமிழ்ப் பண்பாட்டு நெறிகளுக்கும் ஊனம் ஏற்பட்டன.
÷ஏறத்தாழ 80 ஆண்டு காலம் கோயில்கள் சூறையாடல்களுக்கு ஆட்பட்டதோடு, தேவாரம், பிரபந்தம் போன்ற பனுவல்கள் பாடுதல், இசை, நாட்டியம், சிற்பம் ஆகியவை எழுச்சி பெறுதல் ஆகியவை தடைப்பட்டன. அக்கடுமையான காலம் மாறியபின் மரபுப் பெருமைகள் மீட்டுருவாக்கம் பெறலாயின. அத்தகைய காலகட்டத்தில் தேவார மரபைத் தூக்கி நிறுத்தவும், சைவ உலகத்திற்கு அறிவுறுத்தவும் முதன் முதலில் உதித்ததே உமாபதிசிவம் இயற்றிய "
திருமுறைகண்ட புராணம்' என்னும் அரிய நூலாகும்.÷
÷சோழர் காலத்தில் (கி.பி.1100-இல்) முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவனாக விளங்கிய அரும்பாக்கிழான் மணவிற்கூத்தன் என்பான் மூவர் திருப்பதிகங்களையும் செப்பேடுகளில் எழுதி, தில்லைக்கோயிலில் வைத்ததை அங்குள்ள கல்வெட்டுப்பாடல் இனிதே உரைக்கிறது. இதுபோன்றே குலசேகரபாண்டியன் காலத்தில் (கி.பி.1206-இல்) அம்மன்னவனின் உயர்நிலை அலுவலரான பிள்ளை பஞ்சவன் பிரமாதிராஜன் என்பவர் திருமுறைகளைச் செப்பேடுகளில் எழுதிக் காத்தமையால், "திருமுறைகண்ட பெருமாள்' என்ற சிறப்புப் பட்டத்தைப் பாண்டியனிடமிருந்து பெற்றார் என்பதைத் தென்பாண்டி நாட்டு ஆற்றூர் கல்வெட்டு எடுத்துரைக்கிறது. செம்பில் எழுதப்பட்ட இவ்வரிய படைப்புகள் இன்று தமிழகத்தில் காணப்படவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
÷திருவாரூர் மாவட்டத்தில் திருவிடைவாசல் என்றோர் ஊர் (கொரடாச்சேரி மன்னார்குடி சாலையில்) உள்ளது. 1912-ஆம் ஆண்டில் திருக்களர் சுவாமிநாத மாதவராயர் என்ற பெரியவர் திருவிடைவாயில் சிவாலயத்துத் தென்புறச்சுவரில் சோழர் காலக் கல்வெட்டாக அத்திருக்கோயிலில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதனை உலகுக்கு அறிவித்தார். அதுவரை இப்படி ஒரு தேவாரத்தலம் இருந்தது யாருக்கும் தெரியாது. பின்னர் 1918-ஆம் ஆண்டு இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறையினர் அக்கோயிலுக்கு வந்து இத்தேவார கல்வெட்டைப் படி எடுத்து பதிவு செய்ததோடு, அக்கோயிலில் கங்கைகொண்ட இராஜேந்திரசோழன் காலத்திலிருந்து தொடர்ந்து பல அரசர்களால் வெட்டப்பட்ட 25 கல்வெட்டுச் சாசனங்களையும் படி எடுத்து பதிவு செய்தனர். பின்பே தேவார அச்சு நூல்களில் இப்பதிகம் இடம்பெறலாயிற்று.
""ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர்ஆம்
மாறுஇல் பெருஞ்செல்வம் மலி விடைவாயை
நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன்
கூறும் தமிழ் வல்லவர் குற்றம் அற்றாரே''

என்ற பதினோராம் பாடலாகிய திருக்கடைக்காப்புடன் திகழ்ந்த கிடைத்தற்கரிய இத்தமிழ்ச் செல்வத்தைக் காண இன்று நாம் அத்திருக்கோயிலுக்குச் செல்வோமாயின், மகா மண்டபத்துத் தென்புறச் சுவரில் ஒரு பெரிய கல்வெட்டுப் பகுதியைச் சுற்றி நீல வண்ணத்தில் கோடிட்டு மேலாக, ""திருஞானசம்பந்தரின் இப்பதிகக் கல்வெட்டுகளே இத்தலத்தைப் புலப்படுத்தின (கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1912)'' என்று எழுதிவைத்துள்ளனர்.
÷தமிழுக்குக் கிடைத்த அரும் செல்வம் என்ற நோக்கோடு ஆர்வமாக அக்கல்வெட்டைப் படிக்க முற்படுவோமாயின், அத்தலத்தின் முதற்பாடல் மட்டுமே அங்கு கல்வெட்டாகக் காணப்படும். அடுத்து, தொடர்ந்து படிப்போமாயின் தொடர்பே இல்லாதவாறு அக்கோயிலில் இருந்த கல்வெட்டுக்களின் பகுதிகள் மாறிமாறி இருப்பதைக் காணலாம். அவை நிலக்கொடை பற்றியும் விளக்கு தானம் பற்றியும் குறிப்பிடும் பகுதிகளாகும். 1935-க்குப் பிறகு அக்கோயிலைத் திருப்பணி செய்ய முனைந்தவர்கள் அங்குள்ள அனைத்து கல்வெட்டுக் கற்களையும் பிரித்து இடம் மாற்றியதோடு, தேவாரக் கல்வெட்டின் பிற பகுதிகளைக் கட்டடத்துள் பொதித்தும், தலைகீழாகத் தரையில் பாவுகற்களாகப் பதித்தும் அழித்துவிட்டனர். இதனைச் செய்தவர்கள் தமிழர்களே என்பதுதான் வேதனைக்குரிய செய்தியாகும்.
÷1918-இல் திருவிடைவாயிலில் எடுக்கப்பட்ட கல்வெட்டின் மைப்படி இன்று மைசூர் நகரத்தில் உள்ள கல்வெட்டுப் பதிப்புத்துறை அலுவலகத்தின் காப்பு அறையில் உறங்கிக்கொண்டிருக்கிறது. நம் தலைமுறையில் கிடைத்த தேவார தமிழ்ச் செல்வத்தை அழித்துவிட்டோமே, இது நியாயமா?




நன்றி- முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

              அம்மாஎன் தெய்வம் வல்லம் தமிழ்
 
              FACEBOOK FRIENDS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக