புதன், 23 மே, 2012

ராமர் வல்லம் வந்தார்



வல்லம் ஒரு புராதனமான ஊர் அதனாலேயே இங்கு பல மிகவும் பழைய கால கோவில்கள் அமைந்துள்ளது.


மேலும் இங்கு ஒரு கோட்டை இருந்தற்கான அடையளமாக பெரிய அகழியை இன்றும் நீங்கள் கானலாம்.

இங்கே ஒரு அழகிய சிவன் கோவில் உள்ளது. இங்கு உள்ள இறைவன் வஜ்ரபுரீசுவர்.
இந்திரன் இங்கு வந்து வழிபட்டு தான் கெளசிக முனிவரிடம் பெற்றிருந்த சாபங்களிலிருந்து விமோசனம் அடைந்த்தாக கூறப்படுகிறது.


இங்கு ஆழம் தெரியாத, மிகவும் பழைமையான ஒரு குளம் உள்ளது. இது ராமர் இலங்கை போரில் ராவனனை தோற்கடித்த பிறகு இந்த வழியாக வரும் போது சீதாவுக்கு தாகம் எடுத்ததால் ராமர் அவருடைய வஜ்ராயுதத்தை கொண்டு இந்த குளத்தை தோண்டியதாகவும் அந்த வஜ்ராயுதம் இன்றும் தோண்டி கொண்டே போகதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த குளம் மற்றும் கோவிலை புனரமைக்க ஆரம்பித்து அது முடியாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்ட்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக